கண்டியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

0

கொரோனா தொற்றுக்கு உள்ளான 25 வயது இளைஞன் மருத்துவமனை முன்பாக விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு இடுப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ள சென்ற இளைஞன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here