கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு?

0

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற, நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜ் குந்த்ராவை பிரிந்து, அவர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here