கணவரை விற்க முயன்ற மனைவி… வரிசையில் நிற்கும் 12 பெண்கள்!

0

நியூஸிலாந்தில் உள்ள ஒரு கணவர் அவரது மனைவி மற்றும் அவரது இரு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவியான லிண்டா மெக்அலிஸ்டர் என்பவர் விளையாட்டாக அவர் கணவர் ஜானை ஆன்லைன் தளம் ஒன்றில் விற்பனை செய்ய இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கான ஏலம் ஆரம்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பதிவில் ஜானின் தோற்ற மற்றும் குணாதிசங்களையும் தெரிவித்துள்ளார்.

அதில் ஜான் 6 அடி 1 அங்குலம் உயரம், வயது 37, விவசாயி மற்றும் மீன்பிடிக்க விரும்புவார்.

மிக நல்லவர் என லிண்டா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பின்குறிப்பாக ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது என்ற நிபந்தனையையும் தெரிவித்துள்ளார்.

இதை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்குபெற்றுள்ளனர்.

இந்த ஏலம் 100 டாலர்கள் வரை சென்றுள்ளது.

இதனை கண்டுபிடித்த அந்த இணைதளம் லிண்டா பதிவிட்ட பதிவை உடனடியாக நீக்கியுள்ளது .

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதளத்தின் மேலாளர் தெரிவிக்கையில், எனக்கு ஞாபகம் தெரிந்தவரை இதுபோன்று யாரும் எங்கள் இணையதளத்தில் தன் கணவரை விற்றதில்லை..

இதுதான் முதல்முறை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனைவி தன் கணவனை இணையத்தில் விற்காக முயற்சி செய்த சம்பவம் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here