கணவருக்கும், நண்பருக்கும் அதிர்ச்சி கொடுத்த பெண்…

0

தமிழகத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவ வழக்கு ஒன்றில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்தவர் ஜீவா (வயது 29).

தச்சு தொழிலாளியான இவருக்கு கவிதா (வயது 25) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்.

இவர் கடந்த 16-ம் திகதி ஜீவா அவரது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்துள்ளார்.

இதனை அடுத்து மனைவி கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது மதுபோதையில் இருந்த தனது கணவர் கீழே தவறி விழுந்து இறந்துவிட்டதாக பொலிசாரிடம் கவிதா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜீவாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

அதில் ஜீவாவின் முகம், வாய் மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டர்.

அப்போது கவிதா மற்றும் ஜீவாவின் நண்பர் ராஜா (வயது 39) ஆகியோர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இருவரையும் கைது செய்து விசாரித்த போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், ஜீவாவை கொலை செய்ததாக இருவரும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பொலிசாரிடம் கவிதாவும், ராஜாவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here