கணவனின் தலையுடன் பாதையில் நடந்து வந்த மனைவியால் பரபரப்பு…

0

இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரவிச்சந்திரன் (53) – வசுந்தரா (50).

இவர்கள் இருவருக்குள்ளும் கடந்த சில நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அவர்கள் இருவரிடையே வாக்குவாதம் முற்றியதால், கணவனின் தலையை கழுத்தை அறுத்து வசுந்தரா கொலை செய்துள்ளார்.

ரவிச்சந்திரன் இறந்ததை அடுத்து வசுந்தரா வீட்டை விட்டு தலையுடன் வெளியே சென்றுள்ளார்.

இரத்தக் கறைகளுடன் வசுந்தரா சென்றதை கண்டு பயந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வசுந்தராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here