கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள்

0

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும், மொத்த விற்பனைக்காக மாத்திரம் இன்றும், நாளையும், திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மொத்த விற்பனையாளர்களும், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பிரவேசித்து, மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள், நாளை மறுதினத்துடன் தளர்த்தப்படவிருந்த நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று அறிவித்தார்.

நாட்டின் சூழ்நிலையைக் கருதி, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழிற்சாலை, கட்டுமானத் தளங்கள், கிராமிய சந்தைகள், விவசாய மற்றும் இயற்கை உர உற்பத்தி நடவடிக்கைகள், பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் இடம்பெறும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

வாராந்த சந்தைகள் திறக்கப்பட்டாலும், சுகாதார வழிமுறைகளுக்கு அமைய, மட்டுப்படுத்தப்பட்ட அளவினரை மாத்திரமே அனுமதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here