கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 15 மணித்தியாலங்களாக பயணிகள் காத்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய பிசிஆர் ஆய்வகத்தின் தொழில்நுட்பப் பணிகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த இரண்டு நாட்களில் ஆய்வகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிசிஆர் சோதனை அறிக்கைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

PCR பரிசோதனை அறிக்கைகள் 3 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினாலும், சில பயணிகள் சுமார் 15 மணி நேரம் விமான நிலையத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பல வெளிநாட்டு பயணிகள் பயணிகள் தங்கள் பிசிஆர் சோதனை அறிக்கைகள் வெளியாகும் வரை மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here