கட்டார் செல்லும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் கனேடிய கால்பந்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கட்டார் நாட்டிற்குச் செல்லும்போது மனதில் கொள்ள வேண்டிய அனைத்து பழக்கவழக்கங்கள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவெளியில் கைகளைப் பிடிப்பது மற்றும் முத்தமிடுவது உட்பட எதுவும் கட்டாரில் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கனேடியர்கள் விவேகத்துடன் நடந்து கொள்வதுடன், மதம் மற்றும் சமூக மரபுகளை மதித்து, புகைப்படம் எடுப்பதற்கு முன் உள்ளூர் மக்களிடம் அனுமதி பெற வேண்டும்

அரசு கட்டிடங்களை புகைப்படம் எடுப்பது,

பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது மற்றும் துப்புவது,

பன்றி இறைச்சியை உண்பது போன்றவை சட்டவிரோத செயல்களாகக் கருதப்படுகிறது,

இதனால் கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கட்டாரில் மட்டுமின்றி, பெரும்பான்மையான முஸ்லீம் அமீரகத்தில் மதுபானம் கண்டிப்பாக விலக்கப்பட்டுள்ளதால், பொது இடங்களில் மது அருந்துவது சட்டவிரோதமாகும்.

இருப்பினும், உலகக் கிண்ணம் கால்பந்து ரசிகர்களுக்காக மது விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விற்கப்படுவதுடன், மது அருந்தவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here