வெள்ளப் பெருக்கால் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஜேர்மனி மற்றும் சுவிஸ்…! பலர் மாயம்

0

ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, சுவிஸில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளுக்கு நாள் மரண எண்ணிக்கையும் சேதங்களும் அதிகரித்து வருகிறது.

இதுவரை 60 பேர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியிருப்புகள் பல மொத்தமாக சேதமடைந்துள்ளதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பெரும்பாலான இறப்புகள் ஜேர்மனியில் பதிவாகியுள்ளது.

பலர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் கூரைகளின் மீதேறி உதவிக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்தில் 8 மரணங்கள் பதிவாகியுள்ளது.

ஆனால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கரைகளை உடைக்கும் அளவுக்கு கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here