கடும் பனியில் உறைந்து பலியாகிய குடும்பம் தொடர்பில் வெளியாகிய தகவல்

0

கனடா அமெரிக்க எல்லையில் கடந்த புதன்கிழமை, நான்கு உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் உயிரிழந்தவர்கள், குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் ஆவர்.

ஜகதீஷ் கௌரவமான பள்ளி ஒன்றில் பணியாற்றும் நல்ல வருவாய் கொண்ட ஆசிரியர் ஆவார்.

சுமார் 65 இலட்ச ரூபாய் ஏஜண்டுகளுக்குக் கொடுத்து எப்படியாவது அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளது ஜகதீஷ் குடும்பம்.

அத்துடன், ஜகதீஷ் குடும்பம் மட்டுமின்றி, Dingucha கிராமத்திலிருந்து வேறு பலரும், அமெரிக்கா செல்வதற்காக, கனடா சென்று, அங்கிருந்து எல்லையைக் கடந்து நடந்தே அமெரிக்காவுக்கு புறப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் பலரின் நிலை தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை.

ஜகதீஷ் குடும்பத்திலுள்ள, Dingucha கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்களாம்.

அமெரிக்காவில் செட்டில் ஆவது, ஒரு தன்மானப் பிரச்சினையாக அக்கிராமத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது.

அதாவது, குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை என்றால், அது குடும்பத்துக்கு அவமானம் என அக்கிராமத்தினர் கருதி வருகின்றனர்.

ஆகவேதான், எப்படியாவது அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிடுவது என புறப்பட்டிருக்கிறது ஜகதீஷ் குடும்பம்.

ஆனால், அமெரிக்காவில் செட்டில் ஆவதற்கு பதிலாக கனடா அமெரிக்க எல்லையிலேயே அவர்கள் குடும்பமாக உயிர் பிரிந்துள்ளமை பெரும் பரிதாபமாக காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here