சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையான தடைகளை விதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் 22 நாட்களுக்கு மேலாக பொதுமுடக்கம் அமுலில் உள்ளது.
மேலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பொதுமக்களை உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், பொதுமுடக்கத்தை நீக்குவதற்கான எந்தவொரு அறிகுறியும் தெரியாத நிலையில் உள்ளது.
எனவே பொதுமக்கள் உணவு பொருள்களை வாங்குவதற்காக அருகிலுள்ள உணவு விநியோக கூடங்களில் குவிந்து வருகின்றனர்.
நேற்று சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள அவசர உணவு விநியோக நிலையங்களில் ஒன்று கூடிய பொதுமக்கள் அங்கிருந்து பொருள்களை திருடிக்கொண்டு ஓடியுள்ளனர்.
இத்தைகைய நெருக்கடி நிலையானது கடினமான கட்டுப்பாடு, உணவு பொருள்களின் தட்டுப்பாடு குறித்த அச்சம் மற்றும் விநியோகங்கள் சரிவர நடைபெறாதது ஆகியவற்றின் விளைவாக பொதுமக்கள் உணவு பொருள்களை திருடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சீனாவின் கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கையில்,
அமெரிக்க வழக்கறிஞர் ஜாரெட் டி. நெல்சன்(Jared D. Nelson) கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருக்கின்றன.
அதைவிட கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.