கடல் வாழ் உயிரினங்களுக்கு கொரோனா பரிசோதனை…

0

சீனாவின் ஜியாமெனில் ‘கொவிட்-19’ வைரஸ் பரவி வருகின்றது.

அதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மட்டுமின்றி, அவர்கள் கொண்டு வரும் மீன்களுக்கும் ‘கொவிட்-19’ பாதிப்பு உள்ளதா என பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜியாமென் என்பது சீனாவின் கடற்கரை நகரமாகும். இந்த நகரத்தில் இருந்து 40 பேர் ‘கொவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து , நகரத்தில் வசிக்கும் 5 மில்லியன் மக்களும் ‘கொவிட் 19’ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

சுகாதார அதிகாரிகள் மீன்களுக்கு மட்டுமல்ல, மீனவர்கள் பிடித்து கரைக்குக் கொண்டு வரும் கணவாய் மற்றும் நண்டுகள் உட்பட பிற கடல்வாழ் உயிரினங்களுக்கும் பி.சி.ஆர். செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here