கடலுக்கு அடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி….

0

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் புதுவிதமாக செஸ் ஒலிம்பியாட்டை பிரபலமடைய செய்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல்வீரர்கள் செஸ் விளையாடினார்கள்.

கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்துடன் சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் , செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here