கடலுக்குள் மூழ்கிய 129 அடி கப்பல்…! பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

0

அமெரிக்காவின் லூசியானா கடற்கரையில் 129 அடி ‘Seacor Power’ வணிகக் கப்பல் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் கப்பல் மூழ்கியதையடுத்து அமெரிக்க கடலோர காவற்படை மீட்பு பணியை தொடங்கியுள்ளனர்.

சம்பவத்தின் போது கப்பலில் மொத்தம் 19 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

மாயமான 19 பேரில் ஒருவர் சடலமாகவும், மற்ற 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தளபதி வில் வாட்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் 12 பேரை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படையுடன் இணைந்த நான்கு தனியார் கப்பல் ஈடுபட்டுள்ளதாக வில் வாட்சன் தெரிவித்துள்ளார்.

Seacor Power வணிகக் கப்பல் கவிழும் போது 129 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும், 7 முதல் 8 அடி வரை அலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here