கடலில் கவிழ்ந்த படகு… 50 பேர் மாயம்….

0

துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது.

இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படகில் சுமார் 80 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 50 பேரை காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புதேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here