கடன் பணத்தை திரும்ப கேட்க நபருக்கு நேர்ந்த கதி!

0

இந்தியாவில் கரூர் தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் 29 வயதான ரவிக்குமார்.

இவர் ராயனூர் பகுதிக்கு உட்பட்ட தில்லை நகரைச் சேர்ந்த வீரமலை (30) என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கியுள்ளார்.

இதையடுத்து ரவிக்குமார் தான் கொடுத்த பணத்தை கேட்பதற்காக தில்லை நகரில் உள்ள வீரமலை வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது வீரமலை, ரவிக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கத்தியால் ரவிக்குமாரை குத்தியுள்ளார்.

இதில் காயம் அடைந்த ரவிக்குமார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் வீரமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here