கசிந்தது திட்டம்! அதிர்ந்தது அரசக்குடும்பம்!

0

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணங்களாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கசிந்து இருப்பது அரசக்குடும்பத்தினரிடையேயும்,மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஆபரே‌ஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்ற குறியீட்டு பெயரில் இங்கிலாந்து ராணி இறந்த பிறகு என்ன நடக்கும்? என்ற விவரங்கள் அமெரிக்க செய்தி நிறுவனமான பொலி டிக்கோவுக்கு கசிந்து இருக்கிறது.

அதில் ராணி இறக்கும் நாளை அதிகாரிகள் ‘டி டே’ என்று குறிப்பிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணி இறந்த 10 நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்யப்படுவார் என்றும் இறுதிச்சடங்கு ஊர்வலம் அவரது மகனும் வாரிசான இளவரசர் ‘சார்லஸ்’ தலைமையில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ராணி உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டி பாராளுமன்ற இல்லத்தில் 3 நாட்கள் வைக்கப்படும். இதில் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு வருவார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டனுக்கு கணிக்க முடியாத கூட்டம் மற்றும் பயண குழப்பங்களை நிர்வகிக்க ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து ராணி இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு திட்ட விவரங்கள் குறித்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக இதற்கு காரணம் யார்? என்றவாறு பல கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இங்கிலாந்து ராணி உயிரிழந்தால் அதனை எவ்வாறு தவறின்றி ஒளிபரப்புவது என்று அவ்வப்போது பிபிசி செய்தி நிறுவனம் ஒத்திகை மேற்கொள்ளும்.

இவ்வாறு ஒருமுறை மேற்கொள்ளும் பொது அந்த செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் தவறுதலாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையாகி பிபிசி மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here