ஓய்வூதியம் பெறுவோருக்கு இன்று இலவச போக்குவரத்து வசதிகள்

0

ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை பெற இன்று இலவச போக்குவரத்து வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அத்தகைய போக்குவரத்து வசதிகளைப் பெற ஓய்வூதியக்காரர்கள் தமது ஓய்வூதிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது ஓய்வூதியத் திணைக்களத்தால் அனுப்பப்பட்ட குறுஞ் செய்தி ஆகியவற்றை சுட்டிக்காட்டி தபால் அலுவலகங்கள் அல்லது தொடர்புடைய வங்கி கிளைகளுக்கு செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியக்காரர்கள் தங்களுக்கான ஓய்வூதியைக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள, வீடுகளில் இருந்து வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்து சபை / பிரதேச செயலகங்கள் மற்றும் இலங்கை இராணுவம் என்பன கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

ஓய்வூதியைக் கொடுப்பனவை வழங்குவதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் திறந்திருக்கும்.

அதேநேரம் தபால் நிலையங்கள் ஜூன் 12 சனிக்கிழமை வரை திறந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here