சுவிட்சர்லாந்தில் 100,000 மேற்பட்டோருக்கு கொரோனா சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பாதிப்புகள் அதிகரித்து காணப்படுவதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்திலும் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் கண்காணித்து வருவதாகவே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பின்னர் ஏற்படும் நீண்ட கால பக்கவிளைவுகள் தொடர்பில் தேசிய அளவில் பதிவு செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதே கோரிக்கையை முன்னர் சுகாதாரத்துறை நிராகரித்திருந்தது.
தற்போது அந்த முடிவை கைவிட்டு தேசிய அளவில் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளதை மாநில நிர்வாகங்கள் வரவேற்றுள்ளன.
சுமார் 25% கொரோனா நோயாளிகள் நீண்ட கால பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
3% பேர்கள் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
சூரிச் பலகலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.