கொரோனா தொற்று பல்வேறு நிலையில் மாறுபாடு அடைந்துள்ளது.
தற்போது ஓமிக்ரான் கொரோனாவின் கடைசி மாறுபாடு என கருத்துவது மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் Tedros Adhanom தெரிவிக்கையில்,
மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் கொரோனாவின் கடைசி மாறுபாடு என்றும், உலகம் தொற்றுநோயின் இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் கருதுவது ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
சோதனை மற்றும் தடுப்பூசிகள் போன்ற உத்திகள் மற்றும் கருவிகள் விரிவான முறையில் பயன்படுத்தப்பட்டால், கொரோனா உலகளாவிய சுகாதார அவசரநிலையை உருவாக்கும் தொற்றுநோயின் கடுமையான கட்டத்தில் இருந்து இந்த ஆண்டு வெளியேற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
நிர்வாகக் குழுக் கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய டெட்ரோஸ், ஒன்பது வாரங்களுக்கு முன்பு ஓமிக்ரான் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, 80 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் ஐ.நா-வில் பதிவாகியுள்ளன.
இது 2020 முழுவதும் பதிவாகியதை விட அதிகம் என Tedros Adhanom குறிப்பிட்டுள்ளார்.