ஓமிக்ரானின் துணை மாறுபாடு அதிக ஆபத்தானது…! விஞ்ஞானிகள் அதிர்ச்சி

0

ஓமிக்ரானின் துணை மாறுபாடான BA.2 டென்மார்க்கில் தீவிரமாக பரவி வருகிறது.

டென்மார்க்கில் டிசம்பர் மற்றும் ஜனவரி இடையே 8,500 குடும்பங்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில், BA.1 உடன் ஒப்பிடும்போது, BA.2 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 33% அதிகமாக மற்றவர்களுக்கு பரவக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஓமிக்ரானின் அசல் மாறுபாடான BA.1 உலகளவில் 98% க்கும் அதிகமான பாதிப்புகளுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் மூலம் ஓமிக்ரான் BA.2, BA.1-ஐ விட அதிகமாக பரவக்கூடியது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது நோயெதிர்ப்பு-தவிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

இது தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவை மேலும் குறைக்கிறது என்று ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், BA.2 தடுப்பூசி போடப்பட்டவர்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here