ஓமிக்ரானின் ஆயுட் காலம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

0

சீனாவின் வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட அசல் திரிபை விட கொரோனாவின் புதிய மாறுபாடு மிக நீண்ட காலம் உயிர்ப்புடன் இருக்ககூடியது.

இதனை ஜப்பானில் உள்ள Kyoto Prefectural University of Medicine-ஐ சேர்ந்த குழுவின் ஆய்வில் கெண்டறியப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பரப்புகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனைகளைத் தொடர்ந்து,

அசல் திரிபு மற்றும் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா மாறுபாடுகளின் உயிர்ப்புடன் இருக்கும் நேரம் முறையே 56 மணிநேரம், 191.3 மணிநேரம், 156.6 மணிநேரம், 59.3 மணிநேரம் மற்றும் 114 மணிநேரம் என கண்டறியப்படுள்ளது.

ஆனால் பிளாஸ்டிக் பரப்புகளில் ஓமிக்ரான் மாறுபாடு 193.5 மணிநேரம் உயிர்ப்புடன் இருக்கிறது, இது எட்டு நாட்கள் ஆகும்.

இதற்கிடையில், சடலங்களின் தோல் மாதிரிகள் அசல் மாறுபாடு 8.6 மணிநேரமும், ஆல்பா 19.6 மணிநேரமும், பீட்டா 19.1 மணிநேரமும், காமா 11 மணிநேரமும், டெல்டா 16.8 மணிநேரமும் , ஓமிக்ரான் 21.1 மணிநேரமும் உயிர்ப்புடன் இருந்ததாகக் காட்டுகிறது.

பிளாஸ்டிக் மற்றும் தோல் பரப்புகளில், ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகள் வுஹான் திரிபை விட இரண்டு மடங்கு அதிகம் உயிர்ப்புடன் இருக்கும் நேரத்தை வெளிப்படுத்துகின்றன என ஆசிரியர்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here