ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்?

0

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் இணைந்துள்ளது. இப்படத்தை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், கடைசி விவசாயி படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here