ஓடிடி-யில் வெளியாகும் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி

0

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார்.

இவரது நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. இதுதவிர, மிர்ச்சி சிவாவுடன் விவேக் தொகுத்து வழங்கிய LOL: எங்க சிரி பாப்போம் எனும் காமெடி ரியாலிட்டி ஷோ அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நாம் பார்த்து பழகிய, நம்மை சிரிக்க வைத்த பிரபல காமெடி முன்னணி பிரபலங்கள் சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் போட்டி. 6 எபிசோடுகளாக ஒளிபரப்பாகவுள்ள இந்த காமெடி ரியாலிட்டி சீரிஸ் வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here