ஒலிம்பிக் வீரர்களின் முகக்கவசம்! சமூக வளைதளங்களில் வைரல்….

0

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு ஒரு வருடத்திற்கு பின் இறுதியாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த மெகா விளையாட்டு நிகழ்வு உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமண ப்ரொப்போசல் முதல் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பெருங்களிப்புடையை எதிர்வினைகள் வரை, இந்த 32-வது ஒலிம்பிக் நிகழ்வு உற்சாகத்தில் எந்த குறையும் இல்லாமல் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், Team USA வீரர்கள் அணிந்துள்ள புது விதமாக முகக்கவசம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த முகக்கவசம் வடிவமைப்பு பாரம்பரிய KN95 போன்று இருந்தாலும், ஓவல் வடிவத்தில் வைரம் போன்ற அச்சுகளுடன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

இந்த முகக்கவசத்தின் வடிவமைப்பு பலரைக் கவர்ந்தாலும், அதை அணிந்திருக்கும் பல வீரர்களுக்கு மூக்கு மற்றும் வாயைச் சுற்றி சரியாக பொருந்தவில்லை.

இந்நிலையில், அந்த முகக்கவசம் – கற்பனைக் கதாப்பாத்திரமான சீரியல் கில்லர் ஹன்னிபால் லெக்டர் அணிந்திருந்த முகமூடி, மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் வில்லன்கள் பயன்படுத்திய முகமூடிகளைப் போல் இருப்பதாக மீம்ஸ்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here