ஒலிம்பிக் போட்டி தொடர்பில் வெளியாகிய தகவல்..!

0

கொரோனா வைரஸ் நெருக்கடி மிகவும் மோசமாகிவிட்டால், இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்வது என் விருப்பம் என்று ஜப்பானிய ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதன்படி அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை நாம் கைவிட வேண்டியிருக்கும் என்று ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பொதுச்செயலாளர் தோஷிஹிரோ நிகாய் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கருத்து தெரிவித்ததாக கியோடோ கூறியுள்ளது.

ஜூலை 23 ஆம் திகதி தொடங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கான சமூக தொலைதூர நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய தயாரிப்புகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன.

ஆனால் இதைச் சுற்றி அதிகளவான நிச்சயமற்ற தன்மை தற்சமயம் உருவாகியுள்ளது.

ஜப்பானியர்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் விளையாட்டுகளை ஒத்திவைக்க அல்லது இரத்து செய்வதற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியது.

ஜப்பானில் தற்சமயம் 511,799 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9,422 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here