ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்படுமா….. ?

0

இந்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளது.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்க உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

எனினும் கொரோனா பாதித்த நபர் யார் என்கிற விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here