ஒலிம்பிக் தொடரில் பதக்க பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடு

0

ஜப்பானில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையை பெற்று வருகின்றது.

இதன்படி 16 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 33 பதக்கங்களை சீனா முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள ஜப்பான், 15 தங்கம், 4 வெள்ளி 7 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 26 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

14 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 41 பதக்கங்களை பெற்று அமெரிக்கா மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

9 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 30 பதக்கங்களுடன் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது.

9 தங்கம், 2 வெள்ளி, 11 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 22 பதக்கங்களுடன் அவுஸ்ரேலியா நான்காவது இடத்திலும் உள்ளது.

பிரித்தானியா, தென்கொரியா, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here