ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு விசேட கொடுப்பனவு

0

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு, நாளாந்தம் 40 அமெரிக்க டொலர் கொடுப்பனவும், 10 ஆயிரம் டொலர் விசேட கொடுப்பனவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய, இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கையின் வீர, வீராங்கனைகளுக்காக வணிக வகுப்பு விமான சேவை வசதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயிற்றுவிப்பாளர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுடன், நாளாந்தம் 40 டொலர் கொடுப்பனவு வழங்குவதற்கும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here