ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி! பிசிசிஐ தகவல்

0

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராது.

ஆனால் லோதா பரிந்துரையின் படி என்.ஏ.டி.ஏ., விதிகளை ஏற்க வேண்டும்.

இதன் படி வரும் 2028ல் நடக்கவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுமாயின், இந்திய ஆண்கள், பெண்கள் அணிகளை அனுப்ப பி.சி.சி.ஐ சம்மதம் தெரிவித்துள்ளது.

2022ல் பர்மிங்காமில் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டுக்கு, பெண்கள் அணியை அனுப்பவும் உறுதி தெரிவித்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலையீடு என்ற, தனிப்பட்ட முறையில் பி.சி.சி.ஐ., சார்பில் அணிகள் அனுப்பப்படும்.

தற்போது இந்திய டென்னிஸ் சங்கம் இப்படித் தான் செய்து வருகிறது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்க இருக்கிறோம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here