ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் தாய்

0

மாலி நாட்டைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸி, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

ஹலிமா சிஸ்ஸி என்ற 25 வயது பெண் 2020ஆம் ஆண்டு கர்ப்பமுற்றார்.

அவரை ஸ்கேன் செய்து பார்த்த போது, 7 குழந்தைகள் அவரது வயிற்றில் இருப்பதாகக் கண்டுபிடித்தனர்.

இதனால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை முறையாக வழங்க மாலி அரசும் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எல்லோரும் 7 குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பார்ப்புக்கு மேலாக 9 குழந்தைகள் பிறந்தன.

இது அங்கிருந்த ஒட்டுமொத்த மருத்துவக் குழுவுக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

பிறந்த 9 குழந்தைகளில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆகும்.

சிறந்த சிகிச்சையின் காரணமாக தாயும் , சேயும் நலமாக இருந்தனர்.

இதற்கிடையே, இந்த நிகழ்வு கின்னஸ் சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த 25 வயதான பெண் – Unmaikkathir.com
Woman Enters World Record After Giving Birth To 9 Children At Once

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here