ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞன்!

0

இந்தியாவில் தெலுங்கானாவில் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை தேடி வருபவர் தான் அர்ஜுன்.

வேலை கிடைக்காத காரணத்தினால் வீட்டில் இருந்த இவர், தன்னுடைய அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி இருவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவர, ஆரம்பத்தில் ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அத்தை மகள்கள் இரண்டு பேருமே அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள ஆசையால் வேறு வழியின்றி இரண்டு பேரையும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆதிவாசிகளான இவர்களது பாரம்பரியமான வாழ்க்கை முறையை மாற்றி முதல் முறையாக இரு பெண்களையும் ஒரே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த திருமணத்தில், இரண்டு பேருக்கும் தாலி கட்டிய அர்ஜுன், இப்போது மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ்ந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here