ஒரே நாளில் வளர்ந்த ஈபிள் கோபுரம்… அபூர்வ சம்பவம்!

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தின் உயரம் ஒரே நாளில் ஆறு மீற்றர்கள் உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், ஈபிள் கோபுர நிறுவன தலைவர் அது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்கிறார்

சென்ற வாரத்தில், ஈபிள் கோபுரத்தின் உச்சியில் புதிய டிஜிட்டல் ரேடியோ ஆன்டென்னா ஒன்று நிறுவப்பட்டது.

ஆறு மீற்றர் உயரம் கொண்ட அந்த ஆன்டென்னா பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈபிள் கோபுரத்தின் உயரம் 324 மீற்றர்களிலிருந்து 330 மீற்றர்களாக அதிகரித்துள்ளது.

ஈபிள் கோபுர நிறுவன தலைவரான Jean-François Martins தெரிவிக்கையில்,

இரும்புப் பெண் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தின் 133 வருட வரலாற்றில், அறிவியல் பூர்வ முன்னேற்றம் என்பது ஒன்றிணைந்த ஒரு விடயமாகும்.

ஈபிள் கோபுரம் இன்று உயரமாகியுள்ளது.

இது அடிக்கடி நடக்கும் ஒரு விடயமல்ல.

ஆகவே, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்கத் தருணம் என்றார்.

1889ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31ஆம் திகதி, முதன்முதலில் ஈபிள் கோபுரம் நிறுவப்பட்டபோது, அது 312 மீற்றர் உயரம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here