
நியூசிலாந்தில் கடந்த 8 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தில், 8.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பூகம்பத்தை உணராவிட்டாலும் யாரும் வீட்டில் தங்க வேண்டாம் ஆபத்தான சுனாமி வரலாம் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டு வருகின்றன.
காலை 8:28 மணிக்கு நியூசிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆக்லாந்து, பே ஆப் பிளண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.