ஒரே ஒரு Whatsapp வீடியோவால் மொத்த சேமிப்பையும் இழந்த இளைஞர்!

0

சுவிட்சர்லாந்தில் சக ஊழியர்களுடனான ஒரு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த வீடியோவால் இளைஞர் ஒருவர் தமது மொத்த சேமிப்பியையும் அபராதமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2020 தொடக்கத்தில் சக ஊழியர்களுடனான ஒரு வாட்ஸ்அப் குழுவில் 21 வயதான அந்த இளைஞர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். குறித்த வீடியோவானது நிர்வாண கோலத்தில் இருந்த சிறுவனின் காட்சிகள் கொண்டது என கூறப்படுகிறது.

அந்த வீடியோ, குறித்த வாட்ஸ்அப் குழுவில் உள்ள 200 உறுப்பினர்களும் பார்த்துள்ளதுடன், அதில் ஒருவர் புகார் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மொபைலை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்த, இந்த விவகாரம் தொடர்பில் வாட்ஸ்அப் குழுவில் சிலர் சாட்சியமும் அளித்துள்ளனர்.

ஆனால் விசாரணையில் அந்த வீடியோவானது எந்த உள்நோக்கமும் இன்றி பகிரப்பட்டதாக தெரியவர அதனால் குறித்த இளைஞர் அனைத்து வழக்குகளிலும் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே குறித்த விவகாரம் தொடர்பில் சூரிச் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் குறித்த இளைஞர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டதுடன் அந்த இளைஞருக்கு 1,000 பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டது.

மட்டுமின்றி நீதிமன்ற செலவீனங்களுக்கான தொகையாக 4500 பிராங்குகுகள் செலுத்தும்படி கோரப்பட்டது. ஒரே ஒரு வாட்ஸ்அப் வீடியோவால் அந்த 21 வயது இளைஞருக்கு அவரது அதுவரையான சேமிப்பு தொகை மொத்தம் 12,000 பிராங்குகள் செலவானதாக தெரிவித்துள்ளார்.

நான் சுயதொழில் செய்வதால், இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேரிடி என குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், நான் ஏன் முதலில் விடுவிக்கப்பட்டேன், ஆனால் இப்போது புகாரளிக்கப்பட்டு இவ்வளவு அதிக தண்டனையைப் பெறுகிறேன் என்பது புரியவில்லை என குழம்பிப்போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவ்வாறான வீடியோக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here