ஒரே இடத்தில் இரு ரயில் விபத்துக்கள் இருவர் பலி…

0

மிஸ்ஸிசாகுவாவில் கனேடிய பசுபிக் ரயில் சேவையின் சரக்கு ரயில் ஒன்றில் இந்தப் பெண் மோதுண்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக 4 வயதான சிறுமியொருவர் மோதுண்ட அதே இடத்தில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டுன்டா வீதி கிழக்கு மற்றும் கவ்த்ரா அவன்யூவில் காலை 6.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜுலை மாத இறுதி வாரத்தில் இந்த இடத்திலேயே ரயிலில் மோதுண்டு நான்கு வயது சிறுமி உயிரிழந்திருந்தார்.

பாதுகாப்பற்ற வகையில் குறித்த பகுதியில் ரயில் பாதை காணப்படுகின்றது.

பாதுகாப்பு வேலிகள் இல்லாத காரணத்தினால் சிறுமி உயிரிழந்திருந்தார் என தெரியவந்துள்ளது.

மெட்ரோலிங்க்ஸ் நிறுவனம் இந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலிகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் விபத்துச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here