ஒரு விஸ்கி போத்தலின் விலை 1 கோடி ரூபா…..

0

உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த 250 வருடங்களுக்கு முந்தைய ஒரு விஸ்கி போத்தலின் விலை ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

இங்க்லெட் என்ற இந்த விஸ்கியை கடந்த 1860 ஆம் ஆண்டில் பாட்டிலில் அடைத்துள்ளனர்.

எனினும், பாட்டிலில் அடைப்பதற்கு சுமார் ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே இதனை தயாரித்துள்ளனர்.

மிகப் பழமையான இங்க்லெட் (Ingledew) விஸ்கி தான் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த விஸ்கி, சமீபத்தில் மிட்டவுன் மன்ஹாட்டனில் இருக்கும் அருங்காட்சியகம், தி மோர்கன் என்ற நூலகத்திற்கு 1,37,500 அமெரிக்க டாலர்களுக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதியில் ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது.

இது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாயை தாண்டுகிறது.

மேலும் அந்த காலகட்டத்தில் உள்ள ஒரு பாட்டில் பழைய ஸ்காட்ச் தற்போது ஏறக்குறைய இரண்டு மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here