ஒரு வாரத்தில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் 106 பேர் உயிரிழப்பு

0

வட மாகாணத்தில் கடந்த வாரத்தில் 4 ஆயிரத்து 83 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், 106 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் மட்டும் நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 5 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். செப்ரெம்பர் மாதத்தின் முதல் ஏழு நாள்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 515ஆக உயர்வடைந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நேற்று செப்ரெம்பர் 7ஆம் திகதி 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 246 பேரும் வவுனியாவில் 160 பேரும் கிளிநொச்சியில் 99 பேரும் முல்லைத்தீவில் 39 பேரும் மன்னாரில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here