மியான்மரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு இராணுவம், கடந்த மாதம் முக்கிய தலைவர்களை சிறைபிடித்து ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது.
இதைதொடர்ந்து ஆட்சி விழ்வதை எதிர்த்து போராடும் மக்களை இரக்கமின்றி மியான்மர் இராணுவம் சுட்டுக் கொன்று வருகிறது.
மார்ச் 27ம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதும் 114 பேரை இராணுவ ஆட்சிக்குழுவின் ஆயுதமேந்திய படையினர் கொன்று குவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், யாங்கோனில் உள்ள தமினில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை, ஆயுதமேந்திய படையினர் ரப்பர் புல்லட் மூலம் கண்ணில் சுட்டுள்ளனர்.
சுடப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை கதறி அழுது துடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
குழந்தைக்கு ஏற்பட்ட காயம் குறித்த மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
எனினும், சிகிச்சைக்கு பின் நலமாக இருப்பதாக நம்பப்படுகிறது.