ஒரு பாட்டில் வோட்கவை குடித்த இளைஞருக்கு நேர்ந்த கதி….

0

அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் டேனியல் சான்டுல்லி வயது 19.

இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மிசோரி பல்கலைக் கழகத்தில் இணைந்து கல்வி பயின்று வந்துள்ளார்.

அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த போது அவரது நண்பர்கள் சான்டுல்லியிடம் ஏளனமான தொனியில் ‘ஒரே மடக்கில் ஓட்காவை குடித்து விடு என சவால் விட்டுள்ளனர்.

அதனை ஏற்றுக்கொண்ட சான்டுல்லியும் முழு பாட்டில் வோட்க்காவையும் ஒரே மடக்கில் குடித்து சவாலில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒரே மடக்கில் வோட்கவை குடித்ததால் அவரது உடம்பில் உள்ள இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 6 மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் சான்டுல்லி(19) முளை பாதிக்கப்பட்டதோடு, அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார்.

இதை அடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சான்டுல்லின் உடல் தற்போது ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நிதிமன்றத்தில் வந்த போது டேனியலால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.

அவர் சுய நினைவு இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வழக்கு குறித்து டேனியலின் குடும்ப வழக்கறிஞர் டேவிட் பியாஞ்சி, தனது 30 ஆண்டு அனுபவத்தில், இப்படியொரு மோசமான சம்பவத்தை பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here