ஒமைக்ரொன் வைரஸின் அச்சுறுத்தல்! WHO எச்சரிக்கை

0

ஒமைக்ரொன் கொவிட் வைரஸ் திரிபின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னைய திரிபுகளை விட ஒமைக்ரொன் தொற்றானது மக்களை கடுமையாக தாக்கும் தன்மை குறைவானது என அண்மைய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரொன் தொற்று உறுதியாகும் நபர்களின் எண்ணிக்கையானது, சுகாதாரக் கட்டமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் கடந்த வாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 சதவீதத்தினாலும், அமெரிக்காவில் 100 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் உலகெங்கிலும் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கையில் 90 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here