ஒமைக்ரொன் உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பு!

0

ஒமைக்ரொன் உள்ளிட்ட சார்ஸ்-கோவ்-2 வைரஸ் வகைகளுக்கு எதிரான புதிய தடுப்பூசியினை ஒஸ்திரிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாதவர்களுக்கும் குறித்த தடுப்பூசி பலன் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியன்னா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறித்த தடுப்பூசியை கண்டறிந்துள்ளனர்.

முன்னதாக விலங்குகளுக்கும் பின் மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ளது.

நோய் எதிர்ப்புச்சக்தியானது, உடல் கலங்களில் வைரசை நுழையவிடாமல் தடுக்கிறது.

இதனால் தொற்று ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

போதுமான நிதி கிடைத்தால், அனுமதிக்கு தேவையான முதல் மருத்துவ பரிசோதனைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here