ஒமைக்ரான் வைரஸ் தொடர்பில் முக்கிய ஆய்வு தகவல்

0

இங்கிலாந்தில் டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றுக்கு பிறகு நீண்ட கால கொரோனா பாதிப்பு உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது.

20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது.

இது நோயாளியின் வயது மற்றும் கடைசி தடுப்பூசி செலுத்திய நேரத்தை பொறுத்து மாறுபட கூடியது.

ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது.

அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரை ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தில் இருந்த போது நோய் பாதிப்புக்குள்ளான 56,003 பேரில் 4.5 சதவீதம் பேர் நீண்ட கால பாதிப்பை பதிவு செய்து உள்ளனர்.

டெல்டா வைரஸ் அலையின்போது (2021 ஜூன் முதல் நவம்பர் வரை) 41,361 பேரில் 10.8 சதவீதம் பேர் நீண்ட கால கொரோனா அறிகுறிகளுடன் இருந்து உள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் டாக்டர் கிளாரி ஸ்டீவ்ஸ் தெரிவிக்கையில்,

ஒமைக்ரான் வைரசால் நீண்ட கால பாதிப்பு இருக்கும் வாய்ப்பு குறைவு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை நீக்கி விட கூடாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here