ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு…. எச்சரிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்

0

தற்போது உலக நாடுகளை கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரோன் அச்சுறுத்தி வருகின்றது.

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு, 77 நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஒமிக்ரோன் பெரும்பாலான நாடுகளில் உள்ளது எனினும் அது இன்னும் அங்கு கண்டறியப்படவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபன தலைவர் கூறியுள்ளார்.

நாம் வேறு எந்த வகையிலும் காணாத வேகத்தில் ஒமிக்ரோன் பரவுகிறது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.

தொற்று நோய் பரவலை தடுக்க கொவிட் தடுப்பூசி மட்டும் போதாது,முகக் கவச பயன்பாடு, சமூக இடைவேளை, காற்றோட்டம் மற்றும் கை சுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் ( Tedros Adhanom) வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here