ஒமிக்ரானை விட ஆபத்தான வைரஸ்! WHO எச்சரிக்கை

0

கடந்த 2 ஆண்டுகளாக இந்த கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் என்ற கொரோனா வைரஸின் புதிய திரிபான பிஏ2 என்ற வைரஸ் பரவ தொடக்கி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஒமிக்ரான் வைரஸிடம் இருந்து புதிய திரிபுகளாக பிஏ1, பிஏ2 மற்றும் பிஏ3 தோன்றி உள்ளது.

அதில் பிஏ2 உருமாற்றம் விரைவாகப் பரவுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த புதிய திரிபு பிரித்தானியா, டென்மார்க் ஆகிய நாடுகளை தவிர ஸ்வீடன், நார்வே, இந்தியா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை இந்த புதிய திரிபு 40 நாடுகளில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய பிஏ2 ஒமிக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வலிமை பெற்றது.

இது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அதிகம் பாதிக்கும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

மூன்றாவது அலையே இன்னும் முடிவடையாத நிலையில் நான்காவது அலையை இந்த பிஏ2 வைரஸானது கொண்டுவரலாம் என எதிர்பார்ப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here