ஒன்றாரியோ வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்…

0

ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருட்களுக்கான விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

தென் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த வார இறுதியில் பெருமளவில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைய உள்ளது.

72 மணித்தியால இடைவெளியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 சத்த்தினால் குறைந்துள்ளது.

இவ்வாறான ஓர் நிலைமையை தாம் முன்னொருபோதும் கண்டதில்லை என கனடாவின் எரிபொருள் கொள்வனவு இயலுமை அமைப்பின் தலைவர் டென் மெக் டியாகு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாள் இடைவெளியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 12 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதியின் பின்னர் இவ்வாறு எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் குறைவடைந்துள்ளது.

எரிபொருட்களின் விலைகள் விரைவில் மீளவும் அதிகரிக்கும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here