ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தேர்தலின் போது எரிபொருள் விலை குறித்து வாக்குறுதி அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் எரிவாயுவிற்கான வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக எரிபொருட்களுக்கான விலைகள் வெகுவாக அதிகரித்துச் சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த வரி குறைப்பானது வாடிக்கையாளர்களுக்கு சிறிதளவு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது.
இதன் அடிப்படையில் பெற்றோலின் விலை லீற்றருக்கு 5.7 சதங்களினாலும், டீசலின் விலை லீற்றருக்கு 5.3 சதங்களினாலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும் எரிபொருளின் விலைகள் லீற்றருக்கு 2 டொலர்கள் என்ற அடிப்படையில் உயர்வடைந்துள்ளது.