ஒட்டு மொத்த Internet-ஐ முடக்க வரும் சூரிய காந்தப் புயல்!!

0

உலகின் இணைய கட்டமைப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை தரக்கூடிய சூரிய காந்தப் புயல் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழக்தின் உதவிப் பேராசிரியர் சங்கீதா அப்து ஜோதி சூரிய காந்தப்புயல் குறித்து ஆய்வு செய்துள்ளார். இவரது ஆய்வின் முடிவில் சூரிய காந்தப் புயலால் பெரிய அளவில் இணைய முடக்கம் ஏற்பட்டு இதன் பாதிப்பு சில மாதங்களுக்கு தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த இணைய முடக்கத்தால் பில்லியன் டாலர் கணக்கில் இழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

சூரிய காந்தப் புயல் என்றால் என்ன?

சூரிய காந்தப் புயல் என்பது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய மிகவும் அரிதான நிகழ்வு. சூரியனில் இருந்து அதிக அளவில் காந்த துகள்கள் வெளியேறுவதே சூரிய காந்தப் புயல் என குறிப்பிடப்படுகிறது. வெளியேறும் இந்த காந்த துகள்கள் பூமியை நோக்கி பொழிகின்றன.

இவை பூமியை நோக்கி பொழிந்தாலும் பூமிக்கு நேரடியாக பாதிப்பில்லை. ஆனால் தொலைதொடர்பு சாதனங்களுக்கு அதாவது விண்ணில் இருக்கும் செயற்கைக்கோளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதேபோல உலகின் இணைய கட்டமைப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here