ஒட்டாவாவில் நில அதிர்வு குறித்து எச்சரிக்கை விடுக்கும் புதிய கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நில அதிர்வு ஏற்படுவதற்கு சில செக்கன்களுக்கு முன்னர் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வினை முன்கூட்டியே கண்காணிப்பு செய்யும் புதிய கருவிகள் ஒட்டாவா நகரில் பொருத்தப்பட்டுள்ளது.
கனேடிய இயற்கை வள நிறுவனத்தினால் இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்னதாகவே முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு இந்த கருவிகளின் சமிக்ஞைகள் உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நில அதிர்வு அபாயம் காணப்படும் இடங்களை மையப்படுத்தி கனடா முழுவதிலும் சுமார் 400 கருவிகள் பொருத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.