ஒடிசா கரையை கடக்கும் சக்திவாய்ந்த யாஸ் புயல்..!

0

வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்ததுள்ள யாஸ் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று காலையில் கரை கடக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும், இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் இந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள நியு டிகா பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.

மிகப்பெரிய அலைகள் எழுவதால், கடற்கரையை அண்டிய குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் பல குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளது.

மேலும், ஒடிசா மாநிலம் பாலசோரின் தெற்கே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் கரை கடக்கும்போது மணிக்கு 130 கி.மீ. முதல் 140 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

புயல் தாக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here